கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு! இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்!
தற்போது காலக்கட்டத்தில் மக்களை பல வகைகளில் பணத்தை ஏமாற்றி விடுகின்றனர்.அந்தவகையில் டெக்னாலாஜி சம்பந்தமாகவும் பணத்தை பறிக்கொடுத்து விடுகின்றனர்.அதில் முதலாவதாக நாம் அனைவரும் அதிகளவு செல்போன் உபயோகம் செய்து வருகிறோம்.அப்பொழுது நடுவினிலே மிக குறைந்த விலைக்கு பொருட்கள் தருவதாக விளம்பரம் செய்து மக்களை வாங்க செய்ய எதுவாக தூண்டுகின்றனர்.மக்களும் மலிவான விலையில் கிடைக்கிறது என்று எண்ணி ஆர்டர் செய்து பொருட்களுக்கான பணத்தையும் கொடுத்து விடுகின்றனர்.
சில வெப் சைட்டுகள் பொருட்களை அனுப்பி வைத்து விடுகிறது.ஓர் சில சைட்டுகள் பொருட்களை அனுப்பி வைக்காமல் ஏமாற்றி விடுகின்றனர்.மக்கள் இவ்வாறு பல வழிகளில் ஏமாற்றம் அடைகின்றனர்.இதுபற்றி போலீசார் மற்றும் அரசாங்கம் பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது.மேலும் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.தற்பொழுது நம் கண் முன்னே திருடர்கள் நமது பொருட்களை திருடுகின்றனர்.
அதனை நாம் அறியாமல் ஏமார்ந்து போய்விடுகிறோம்.அப்படி பட்ட சம்பவம் தான் தற்போது கரூரில் நடந்துள்ளது.கரூரில் சின்னாண்டன் என்ற கோவில் சாலை உள்ளது.இங்கு கட்டுமானப்பணிக்கான பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது.இந்த இடம் எப்பொழுதும் கூட்டத்துடன் பரப்பரபாகவே காணப்படும்.இதனை சில திருடர்கள் திருடுவதற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.சில கும்பல் அங்குள்ள ஓர் கடைக்கு வந்து நாங்கள் இங்கு அருகில் தான் வேலை செய்கிறோம்.
எங்கள் முதலாளி சிலைரையாக சம்பளம் கொடுக்காமல் 2000 தாள்களாக 5 நோட்டுகளை தந்துள்ளார்.இதனை நாங்கள் ஐவரும் பிரித்துக்கொள்ள வேண்டும்.எங்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள் தாங்கள் என முதலில் கேட்டுள்ளனர்.இந்த கடை உரிமையாளரும் 20 500 ரூபாய் நோட்டுக்களை தந்துள்ளார்.அதனையடுத்து மீண்டும் அந்த நபர்கள் எங்களுக்கு 500 ரூபாய் வேண்டாம் 100 ரூபாயாய் தாங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.மேலும் அந்த 500 ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கும் போது பத்து நோட்டுக்களை மரத்து விட்டு மீதமுள்ள நோட்டுக்களை தந்துள்ளனர்.
அதனை சிறிதும் எண்ணி பார்க்காமல் கடை உரிமையாளர் வாகிவிட்டார்.நூறு ரூபாய் நோட்டுக்கள் இல்லையென்று அந்த கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.அப்பொழுது அந்த நபர்கள் ,அப்படியென்றால் அந்த 500 ரூபாய் நோட்டுக்களையே தாங்கள் என்று கூறியுள்ளார்.மீண்டும் கடை உரிமையாளர் 20 ஐநூறு ரூபாய் நோட்டுக்களை தந்துள்ளார்.இவர் கடையை மூடம் பொழுது கணக்கு பார்க்கும் போது ரூ.10000 குறைவதை கண்டு அதிர்ந்து பொய் சிசிடிவி காட்சியை பார்த்தார்.
அப்பொழுது தான் தெரிய வந்தது இந்த கும்பலிடம் ஏமாந்தது.பிறகு இது பற்றி அருகில் இருக்கும் கடைகளிடம் கூறியுள்ளார்.அவர்களும் இவ்வாறு ஏமாறிய செயலை கூறியுள்ளனர்.அதனையடுத்து அந்த சாலையிலுள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது மூன்று வண்டிகளில் ஆண்கள்,பெண்கள் என பலர் கும்பலாக வந்துஆனது கடைகளையும் ஏமாற்றியது.அதனையடுத்து இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.மேலும் கடை உரிமையாளர்கள் அனைவரும் அப்பகுதி போலீசாரிடம் புகார் அளித்தனர்.