பெண் நிர்வாகியுடன் அத்துமீறிய பாஜகவின் கே.டி.ராகவன்! வெளியான ஆபாச வீடியோ

0
143

பெண் நிர்வாகியுடன் அத்துமீறிய பாஜகவின் கே.டி.ராகவன்! வெளியான ஆபாச வீடியோ

பாஜகவின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தவர் தான் கே.டி.ராகவன்.இவர் தமிழக பாஜகவின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் பெண் நிர்வாகி ஒருவருடன் அத்து மீறி நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை மதன் டைரி என்ற யூ டுயூப் சேனல் வெளியிட்டுள்ளது.இந்த சேனலை பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிசந்திரன் நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.மேலும் இவர் சமீபத்தில் தான் பாஜகவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் தன் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியின் மீதே இப்படியொரு பாலியல் குற்றசாட்டை சுமத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் ஏற்கனவே மான் கறி விவகாரத்தில் திமுகவின் முக்கிய தலைவரை இணைத்து வீடியோ வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது கே.டி.ராகவன், காம ராகவன் என்கிற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் அவருடைய சேனலில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, “பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர். அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். மேலும் அதற்காக இவர்கள் சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர்.

இதுபோன்ற செயலில் ஈடுபடும் 15 தலைவர்கள் குறித்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்” என்று அதில் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், கே.டி. ராகவன் சட்டையின்றி பூநூலுடன் இருப்பது போல வீடியோ காலில் எதிரில் உள்ள பெண் நிர்வாகியிடம் பேசிக்கொண்டே அவரிடம் தொடர்ந்து பல ஆபாச சைகைகளை செய்கிறார். பின்னர் பூஜை அறையில் அமர்ந்து கொண்டே அந்த நிர்வாகியிடம் வீடியோ கால் பேசியபடியே சுய இன்பத்திலும் ஈடுபடுகிறார்.

சர்ச்சைக்குரிய இந்த வீடியோவானது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அனுமதி பெற்றே வெளியிடப்பட்டுள்ளது என மதன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து கே.டி.ராகவன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவன்னியர் இட ஒதுக்கீடு இடைக்கால தடை விதிப்பு? நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் உயர் நீதிமன்றம்!
Next articleசட்டசபையில் முதல் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மனதார வரவேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!