வன்னியர் இட ஒதுக்கீடு இடைக்கால தடை விதிப்பு? நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் உயர் நீதிமன்றம்!

0
68

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கின்ற வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்கள். இதனைத்தொடர்ந்து முந்தைய அதிமுக அரசு இதற்கான சட்டத்தை கொண்டு வந்த சூழ்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அடுத்து அந்த சட்டத்தினை செயல்படுத்துவதற்கு அரசாணை வெளியிட்டு உத்தரவு கொடுத்தது.

வன்னியர்களின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரையில் வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருக்கும்போதே நியமனம் நடப்பதாக 25க்கும் மேற்பட்ட எதிர் மனுதாரர்கள் சார்பாக வாதிடப்பட்டது இந்த நிலையில், இடைக்கால தடை உத்தரவு குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு அரசுத்தரப்பில் வாதிடும்போது அனைத்து மனுக்கள் மீதான பதிலும் ஒட்டுமொத்தமாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வணிகர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை எதிர் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள்.இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இது குறித்த விவகாரத்தில் மனுதாரர் மற்றும் அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதோடு வழக்கின் இறுதி தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற தேதி நாளைய தினம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதற்கு முன்னதாக கடந்த விசாரணையின்போது தமிழக அரசின் சார்பாக முந்தைய ஜாதி வாரி கணக்கெடுப்பின் படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. எதிர் மனுக்களை தள்ளுபடி செய்யுங்கள் என வாதாடியது குறிப்பிடத்தக்கது.அதேநேரம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு எதிராக திமுக குரல் கொடுத்தது.இருந்தாலும் அதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் அப்போதைய அதிமுக அரசு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கி சட்டத்தை நிறைவேற்றியது.

இதனைத் தொடர்ந்து வந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதிமுக தோல்வியடைந்தது அதன்பின்னர் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்தது என்ற கருத்து பரவலாகி வந்தது அத்தோடு இந்த வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பலர் அந்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தார்கள்.
,இருந்தாலும் அந்த சட்டத்தை இரத்து செய்வதற்கு உச்ச நீதிமன்றமும் சரி, உயர்நீதிமன்றமும் சரி, கொஞ்சமும் தயாராக இல்லை.

இதுதொடர்பாக மூன்றாவது நபர்கள் சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தாலும் கூட இந்த சட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த திமுக அவர்களின் பின்னால் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது ஏனென்றால் அந்த அளவிற்கு அங்கு சட்டத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டவர்களின் மனுக்களில் அடுக்கடுக்கான குற்றங்கள் சாட்டப்பட்டு இருந்தது இருந்தாலும் முறைப்படி சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்ததால் நீதிமன்றம் கூட எதுவும் செய்ய இயலவில்லை.

அதேநேரம் அதிமுக இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது தான் என்று பேசப்பட்டது. அதேபோல வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் மற்ற ஜாதியினர் அதிமுகவை புறக்கணித்து இருக்கிறார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகின்றது.அதேநேரம் இந்த ஜாதி பிரச்சினையை வைத்து ஒரு சில முக்கிய அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகிறார்கள் அதில் தமிழகத்தின் மிக முக்கிய கட்சியும் அடங்கும் அப்படி அரசியல் செய்யும் நபர்களால் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்தது. என்ற ஒரு கருத்து தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.