கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று திமுகவின் ராசா முன்னர் தெரிவித்திருந்தார். அதேபோலவே கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாக அளித்த வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை தெரிவிக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி தானாக முன்வந்து இதனால் பதட்டம் அடைய வேண்டிய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் யாராவது எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நீதிமன்றத்தில் அவரை விசாரணைக்கு வர வேண்டும் என்று யாராவது அழைப்புவிடுத்தார்களா? பின் எதற்காக அவர் வரவேண்டும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக சட்டசபையில் சபாநாயகரின் அனுமதி வாங்காமல் ஏற்பாடு விவகாரத்தை எழுப்பியது எடப்பாடி பழனிச்சாமி தான்.
அவர் மைக்கை பிடித்து பேசும்போது அவருடைய கை நடுங்கியது இதனை எல்லோரும் கவனித்திருக்க வேண்டும். உண்மை என்ன என்பதை இந்த அரசும், காவல்துறையும் வெளியே கொண்டுவர வேண்டும். அப்படி வெளியே கொண்டு வந்தால் நிச்சயமாக அன்று இதற்கான காரணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரிய வரும் என்று சொல்கிறார்..
கொடநாடு பங்களாவில் பாதுகாப்பிற்காக இருந்தது ராவ்பகதூர் கிருஷ்ண பகதூர் என்ற இரண்டு பேர் தானா ஏன் அந்த பங்களாவில் இருந்து காவல்துறை பாதுகாப்பை வாபஸ் பெற்றார்கள். ஒரு போலீஸ் கூட அந்த பங்களாவில் பாதுகாப்பிற்கு இல்லாமல் போனது எதற்காக? என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் புகழேந்தி.