அதிமுகவுக்கு 3 அறக்கட்டளைகள் இருந்தும் கூட அதில் ஒரு அறக்கட்டளை கூட அதிமுகவிடம் அல்லது அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இடமும் இல்லை இதன் காரணமாக, அந்த கட்சியை சார்ந்தவர்கள் செலவுக்கு திண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது. எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பணத்திற்கு என்ன செய்வது அதோடு கட்சியின் அடுத்த கட்ட நிகழ்வுகளுக்கு அதற்கு என்ன செய்யலாம்? கட்சியின் முக்கிய பிரமுகர்களை செலவு ஏற்க வைக்கலாமா என்ற கோணத்தில் அந்த கட்சியின் தலைமை யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய துறைகளை கைகளில் வைத்திருந்த சில முன்னாள் அமைச்சர்களும் பணத்தை வெளியே எடுக்காமல் மறைப்பது காரணமாக, கட்சி மிக விரைவில் நிதி நெருக்கடியில் சிக்கி வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் ராயப்பேட்டையில் பரபரப்பு தகவலாக இருக்கிறது.
அதிமுகவை நிறுவிய கால கட்டத்தில் போக்குவரத்து துறை உள்ளிட்ட பல அரசு பணிகளில் இருக்கும் கட்சியினரை ஒன்று சேர்க்க அண்ணா தொழிற்சங்க பேரவை என்ற அமைப்பை அறக்கட்டளையாக ஆரம்பித்தார் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவருடைய மறைவுக்குப் பின்னர் கட்சி உடைந்தது அதன் பிறகு கட்சியை ஜெயலலிதா கைப்பற்றி விட்டார் கடந்த 2001ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றிய பின்னர் 2003 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அறக்கட்டளை என்று இரண்டு அறக்கட்டளைகளை உருவாக்கினார் மேலே சொல்லப்பட்ட 3 அறக்கட்டளைகளுக்கும் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், உள்ளிட்ட மூவரும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள். ஒரு காலகட்டத்தில் அந்த பொறுப்பில் இருந்து விலகி விட்டார். ஜெயலலிதா இறந்த பின்னரும் 3 அறக்கட்டளைகளுக்கும் பூங்குன்றன் ஒருவரே பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
சென்ற 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிறைக்கு சென்றார் சசிகலா அவருடைய கணவர் நடராஜன் சிகிச்சையில் இருந்தபோது முதன்முறையாக பரோலில் வந்த சசிகலா பூங்குன்றனை நேரில் அழைத்து தன்னுடைய பெயரையும் ,தினகரன் பெயரையும் அறக்கட்டளையில் இணைக்க செய்துவிட்டார். இதற்குப் பின்னர் நடந்தவை தான் அதிமுகவின் தற்போதைய நிதி சிக்கலுக்கு மிகப் பெரிய காரணமாக, இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் காண செலவுகள் கட்சியின் சார்பாக கொடுக்கப்படும் விளம்பரங்கள், அதிமுகவின் தலைமை கழக அலுவலக ஊழியர்கள் போன்றவர்களின் சம்பளம், அலுவலக பராமரிப்பு செலவுகள் விபத்து மற்றும் இயற்கையான மரணத்தை சந்திக்கும் கட்சி தொண்டர்களுக்கு நிதி உதவி தொழில் சங்கத்தில் நலிவடைந்தவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் நிதி உதவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் நிர்வாக செலவுகள் என்று எல்லாமே இந்த மூன்று அறக்கட்டளையின் நிதியைக் கொண்டே செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இருந்தாலும் அதிமுகவில் இருந்து தன்னை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட்டதால் ஆத்திரம் கொண்ட தினகரன் அறக்கட்டளை நிதியை எந்தவிதத்திலும் அதிமுகவிற்கு கொடுக்கக் கூடாது என்று கடிதம் கொடுத்து விட்டார். இதன் காரணமாக, இன்றுவரையில் கட்சி செலவுகளை அறக்கட்டளை நிதியில் இருந்து செய்ய இயலவில்லை அதன் காரணமாகவே, ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு பேரும் கட்சி செலவுக்கு என்று ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் இணைப்பு கணக்கு ஒன்றை ஆரம்பித்தனர். இதில் இருவரின் கையிருப்பு மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து கட்சி செலவுகளுக்காக பெறப்பட்ட தொகை சுமார் 240 கோடி ரூபாய் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிதியை வைத்து தான் அலுவலக ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்டவற்றில் ஆரம்பித்து சமீபத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் என்று அனைத்து செலவுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
அண்ணா தொழிற்சங்க பேரவை கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. ஆனாலும் அதன் பெயரில் இருக்கும் அறக்கட்டளை கட்சியிடம் இல்லாத காரணத்தால், நலிந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தற்சமயம் உள்ளாட்சி தேர்தல் செலவுகளில் ஆரம்பித்து அடுத்தடுத்து செலவுகளை யார் மேற்கொள்வது என்ற இழுபறி கட்சிக்குள் உண்டாகியிருக்கிறது. இதுவரையில் ஒரு சில செலவுகளை ஏற்று வந்த கட்சியின் முன்னாள் அமைச்சர்களும் இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்து இருக்கிறார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் பூங்குன்றன் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள் மட்டுமே அறக்கட்டளைகளை மீட்டெடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் பூங்குன்றன் தரப்பில் கேட்டால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கின்ற சைபர் அரங்கு அம்மா, திருச்சி, கோவை ,மதுரை, திருநெல்வேலி என்று சென்னையை தவிர்த்து தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இருக்கும் அதிமுகவின் கட்சி அலுவலகம் எல்லாம் பூங்குன்றனின் பெயரில் தான் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. சசிகலா ஒருபுறமும், தினகரன் ஒருபுறம் மற்றும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஒருபுறமும் என்று இருப்பதால் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் பூங்குன்றன் குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.. அறக்கட்டளையின் சொத்துக்களைத் தவிர்த்து சுமார் 500 கோடிக்கும் அதிகமான பணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவை யாருக்கும் பயன்படாமல் இருந்து வருகிறது என்பதுதான் சோகமான செய்தி என்று சொல்லப்படுகிறது.
அறக்கட்டளையில் இருந்து ஒரு ரூபாயை கூட எடுக்க இயலாத நிலையிலும் அறக்கட்டளை அதிமுகவிற்கு தான் சொந்தம் என்று அடித்துச் சொல்கின்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஏழை எளிய மக்களுக்கும் நலிவடைந்த நிலையில் இருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் உதவி செய்வதற்காக தான் அதிமுகவில் அறக்கட்டளைகளை ஆரம்பிக்கப்பட்டன நாங்கள் தான் அண்ணா திமுக எங்களிடம் தான் கட்சியின் சின்னம் உள்ளது. அதேபோல கட்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளைகள் கட்சிக்குத்தான் சொந்த மிக விரைவில் சட்ட ரீதியாக செயல்பட்டு இதில் இருக்கும் சிக்கல்களை காய்ந்து எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.