வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு

0
156

வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு

கொரோனா காலத்தில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் முதல் சொந்தமாக பிசினெஸ் செய்பவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் வட்டியில்லாமல் 2 லட்சம் வரை கடனுதவி வழங்குவதாக நாட்டின் முன்னணி ஈ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் தெருவோரங்களில் செயல்பட்டுவரும் சில்லறை பெட்டிக்கடைகள் தான் கிரானா ஸ்டோர்கள்.இந்த கிரானா ஸ்டோர்களை வைத்து தான் ப்ளிப்கார்ட் தன்னுடைய வியாபார திட்டத்தை அறிவித்துள்ளது.அதாவது  இந்த கிரானா ஸ்டோர்கள் மளிகை பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்து வருகின்றன.

அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்கிட பிளிப்கார்ட் நிறுவனம் இந்த கடைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களை வழங்க இந்த கடைகளுடன் பிளிப்கார்ட் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

Flipkart's B2B marketplace for kiranas, small sellers now operational;  begins serving these cities - The Financial Express

இதற்காக கிரானா ஸ்டோர்கள் உரிமையாளர்களை தங்கள் நிறுவனத்துடன் பார்ட்னராக இணைத்து அவர்களுக்கு உரிய பயிற்சியை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கி வருகிறது.இந்நிலையில் அந்த கிரானா ஸ்டோர்கள் நடத்தி வருபவர்களுக்கு உதவும் வகையில் கடன் திட்டத்தினையும் பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் படி 5 ரூபாய் முதல் 2 லட்சம் வரை கடனாக பெற்று கொள்ளலாம்.இந்த பணத்திற்கு 14 நாட்கள் வரை வட்டியில்லை என்றும் அறிவித்துள்ளது.இந்த திட்டத்தை பிளிப்கார்ட் நிறுவனம் ஐடிஎப்சி பார்ஸ்ட் பேங்க் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Previous articleமுன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!
Next articleவிமானத்தில் சிகரெட் பிடித்த பெண்! பயந்துபோன பயனர்கள்!