ஆப்கானிஸ்தான்: முழுமையாக வெளியேறிய பிரிட்டன் படைகள்.

0
168

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் சென்றடைந்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம் எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை (28.8.21) கிளம்பியது. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சுமார் 15 ஆயிரம் பேரை ஆப்கனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் வெளியேற விரும்பியவர்களுக்கு ஏற்பாடுகளை செய்த பிரிட்டன் தூதுவர் லௌரி பிரிஸ்டோ கிளம்பிய விமானம் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஞாயிற்றுக்கிழமை(29.08.21) பிரிட்டன் வந்து சேர்ந்தது.
இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பியது, நம்முடைய வாழ்நாளில் பார்த்திராத வகையிலான ஒரு நடவடிக்கையின் நிறைவு என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பல நாட்டு படைகளும் தங்களது கடைசி விமான சேவையை முடித்துள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் மக்கள் பலர் நாட்டு எல்லைகளிலும் விமான நிலையங்களிலும் வெளியேற போராடிக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய வீரர்? இந்திய அணியில் உண்டான குழப்பம்
Next articleசென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் – வெளியான அறிவிப்பு