சென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் – வெளியான அறிவிப்பு

0
97

சென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் – வெளியான அறிவிப்பு

சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்களுடைய வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் விவரத்தை அக்டோபர் மாதம் 26ம் தேதிக்குள் தங்கள் வசிக்கும் எல்லைக்குள் இருக்கின்ற காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொதுவாக இருக்கின்ற இந்த உத்தரவு தான் இது வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டை வாடகைக்கு விட்ட 15 நாட்களுக்குள் அருகில் இருக்கின்ற காவல் நிலையங்களில் வாடகைதாரர்கள் பெயர் ஒரு புகைப்படம் அவர்களுடைய நிரந்தர முகவரி அவர்கள் முன்னரே வசித்த முகவரி உள்ளிட்ட விபரங்களை இதற்காக இருக்கின்ற விண்ணப்ப மனுக்கள் எழுதி காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்கள் உடன் போடும் ஒப்பந்தம் தொடர்பாக எதுவும் காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தொடர்பான தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவரங்கள் காவல் நிலையங்களில் கணினிகளில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை ஆணையர்கள் அலுவலகங்களிலும், ஆணையர் அலுவலகத்திலும், குற்ற ஆவண காப்பகத்தில் இந்த விவரங்கள் கணினியில் பதிவு செய்து வைப்பார்கள். வெளி மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு குடியிருக்க வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையை மேற் கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் விவரங்களை காவல் நிலையங்களில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜீவால் தற்சமயம் இந்த உத்தரவை மீண்டும் பிறப்பித்திருக்கிறார்.

இதனடிப்படையில் சென்னையில் இருக்கின்ற வீட்டின் உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் விவரங்களை அக்டோபர் மாதம் 26ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து இல்லையென்றால் குற்றச்செயல்களில் தொடர்பு உடையவர்கள் தப்பிச் சென்று வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். அப்படி வசிப்பவர்களை கண்டுபிடிப்பதற்கு முன் பின் தெரியாத அவர்களால் ஏற்படும் குற்றச்செயல்களை தடுப்பதற்கும், காவல்துறை இந்த தகவலை பொது மக்களிடம் கேட்டு இருக்கிறது.

ஏனென்றால் ஏதேனும் குற்றச் செயலை செய்து விட்டு தப்பித்து விட்டால் அவரை பிடிப்பதற்கு ஆதார் முகவரி உள்ளிட்டவைகளை வசதியாக இருக்கும் என்று காவல் துறையின் சார்பாக கருதப்படுகிறது.