ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு!

0
152
Sudden twist in auditor murder case! Liberation Leopards party celebrity and his friends team up!
Sudden twist in auditor murder case! Liberation Leopards party celebrity and his friends team up!

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு!

சென்னை ஆடிட்டரை கடத்திச் சென்று புதைக்கப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து ஆடிட்டரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் காரணமாகதான் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான். 48 வயதான இவர் கடந்த 27ம் தேதி காரில் கிருஷ்ணகிரிக்கு வந்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து மாயமாகி விட்டார். அதன் பின் வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து அவரது மனைவி பூர்ணிமா பிரதான் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் ஒரு பண விவகாரத்தில் ஆடிட்டரை கொலை செய்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாமல்பட்டி அருகே உள்ள கொல்லப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு மாந்தோப்பில் உடலை புதைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் மாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆரியரின் உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் பிரதான் சென்னையில் இருந்து கடந்த 26ஆம் தேதி காரில் வந்தார். அவருடன் வக்கில் கிருஷ்ண குமார் என்பவரும் வந்திருந்தார். இவர்களின் நண்பர் சபரீஷ் மற்றொரு காரில் வந்தார். இவர்கள் வேலூரில் ஒரு வேலையை முடித்துக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்தார்கள். அதன் பிறகுதான் ஆடிட்டர் மாயமாகியுள்ளார்.

எனவே அவருடன் வந்த வக்கீல்கள் கிருஷ்ணகுமார் மற்றும் நண்பர் சபரிஷ் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது அவர்கள் 2 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பண விவகாரத்தில் ஆடிட்டர் ஜனரஞ்சக பிரதானை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளி, பெங்களூரு பிரமுகர்கள், கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ஜெனரல் பிரதான் உடன் பணிபுரிந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இந்த கொலையில் மட்டும் கிருஷ்ணகுமார், சபரீஷ், திருமால், கோபி, சிவன், மணிவண்ணன் என்ற 6 பேரிடம் நேற்று முன்தினம் முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சாமல்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் (42), மத்தூர் திருப்பதி (48), பெங்களூரு கே.ஆர்.புரா பிரசாந்த் (43), லோகா (47) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் 10 பேரிடமும் விசாரணை நடத்தி, அதேபோல கொலையுண்ட ஜனரஞ்சக பிரதான் ஓட்டி வந்த கார் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கே.ஆர்.புறாவில் மீட்கப்பட்டது. இந்த கொலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் எனவும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Previous articleஉத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல்: 39 பேர் பலி
Next articleகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்