அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்றைய தினம் மரணம் அடைந்தார். இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், சசிகலா உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்து அவருடைய மனைவிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகல் விஜயலட்சுமி உடல் சென்னையில் இருந்து அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கொண்டுசெல்லப்பட்டது. பெரியகுளத்தில் இருக்கும் பன்னீர்செல்வத்தின் பழைய வீட்டில் விஜயலட்சுமி உடல் வைக்கப்பட்டது. அங்கே ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இரவு 11 மணி அளவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் சசிகலாவின் அக்காள் மகனுமான டிடிவி தினகரன் பெரியகுளத்தில் இருக்கும் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு வருகை தந்தார்.
அவரைப் பார்த்தவுடனேயே சார் என்று உடைந்து அழத்தொடங்கினார் பன்னீர்செல்வம். அவருக்கு ஆறுதல் தெரிவித்த தினகரன் அங்கேயே சுமார் அரைமணி நேரம் இருந்து பன்னீர்செல்வத்தின் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் என்று எல்லோரிடமும் தன்னுடைய துக்கத்தை பகிர்ந்து கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
டிடிவி தினகரனின் மகளுக்கு எதிர்வரும் 15ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது திருமணம் நடைபெற இருக்கும் சூழலில் திருமண விட்டார்கள் யாரும் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற மரபு இருக்கிறது. ஆனால் அந்த மரபை மீறி இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
மகளுக்கு திருமணம் என்றபோதிலும் பன்னீர்செல்வத்தின் மனைவி இறந்த செய்தி கேட்ட டிடிவி தினகரன் அந்த நள்ளிரவிலும் கூட விஜயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்து விட்டார் என்று டிடிவி தினகரன் தொடர்பாக பன்னீர்செல்வத்தின் வீட்டு வாசலில் குழுமி இருந்த பொதுமக்கள் பேசிக் கொண்டார்களாம்.