மீண்டும் மோதும் தல-தலைவர் : பொங்கல் ஸ்பெஷல்…

0
202

வருகிற தைப்பொங்கல் அன்று தல அஜித் நடித்த வலிமை படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் திரையுலகின் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள மிகப் பெரிய நடிகர்களான அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் தற்பொழுது வலிமை மற்றும் அண்ணாத்த படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதியும் பொங்கல் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதையொட்டி ஓடிடி தளங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இதனால் தற்போது தியேட்டர்கள் திறந்திருந்தாலும் முன்பைபோல் இல்லாமல் மக்களின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

ஆகையால் தல மற்றும் தலைவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் பட்சத்தில் மீண்டும் மக்களின் கூட்டம் தியேட்டரை நோக்கி படையெடுக்கும் என்பது தியேட்டர் உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் கருத்து இது திரையரங்கு மற்றும் அதனை சார்ந்து வாழும் பல குடும்பங்களுக்கு நற்செய்தியாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

தல அஜித் நடிக்கும் வலிமை படம் சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். அதேபோல் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இதற்கு முன்பு தல-தலைவர் படங்கள் விசுவாசம் மற்றும் பேட்டை திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி திரையரங்கில் சக்கை போடு போட்டன்.

இருப்பினும் இந்த படங்கள் ஒன்றாக வெளியிடப்பட்டதால் சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கி கொண்டனர். போட்டியின் இறுதியில் அஜித் நடித்த விசுவாசம் படம் வெற்றி பெற்றது, இந்நிலையில் விசுவாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தான் தற்பொழுது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை போட்டியில் வெல்லப்போவது தலையா தலைவரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleடி20 தரவரிசை : தொடர்ந்து முதலிடத்தில் ஷஃபாலி வர்மா!
Next articleஹர்பஜன் சிங் அர்ஜுன் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படம் டீசர் வெளியானது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here