சட்டப்பேரவை கூட்டத்தொடர் உள்துறை மீதான மானிய விவாதம்! ஆளும் கட்சி எதிர்க்கட்சி இடையே காரசார பேச்சு!

0
272

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.இதனால் அந்தக் கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அவருடைய மகிழ்ச்சி முடிவதற்குள் அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே திமுகவினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சி பரவியது.

ஏனென்றால் அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் செயல்பட்ட விதம் அவ்வாறு இருந்தது அவர் முதலமைச்சராக இருந்த போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரிவர பதில் தர முடியாமல் விழித்துக் கொண்டு இருந்தது திமுக. அதனை மனதில் வைத்துதான் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதால் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானது திமுக.

ஆனால் திமுகவின் தலைமை அத்துடன் நின்றுவிடவில்லை எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது எடப்பாடி பழனிச்சாமியையா? அல்லது பன்னீர்செல்வத்தையா? என்ற பனிப்போர் அதிமுகவிற்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக திமுக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், தமிழக சட்டசபை கடந்த மாதம் 13ஆம் தேதி ஆரம்பித்து தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பல அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது அதோடு பல சட்ட மசோதாக்கள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கேள்வி நேர விவாதங்களின் சமயத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகின்றது. அந்த விதத்தில் இன்று கொடநாடு விவகாரம் குறித்து காரசார விவாதம் ஒன்று நடைபெற்று இருக்கின்றது. காவல்துறை மானிய விவாதத்தில் கோரிக்கைகள் வைக்கப்படும் சமயத்தில் காரசார விவாதம் நடந்திருக்கிறது.

இதில் உரையாற்றிய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்வோம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப் பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை. தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே அதிமுகவின் மீது வீண் பழி சுமத்தப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் கொடுத்து தனியாருக்கு சொந்தமாகி விட்டது என்ற நிலையில், தனியார் சொத்துக்கு எப்படி காவல்துறை பாதுகாப்பு போட இயலும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் சட்டசபை நடைபெறும் சமயத்தில் நேரலை செய்யப்படும் கலைவாணர் அரங்கத்தில் ஒரு சில காரணங்களால், நேரலை வழங்க இயலவில்லை. கொடநாடு விவகாரம் என்பது சாதாரணமானது இல்லை, அங்கே நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை எந்த விதத்தில் சேர்ப்பது? உங்களுடைய முதலமைச்சர் தங்கி அலுவல் பணிகளை மேற்கொண்ட இடம் கோடநாடு. அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் எப்படி அகற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பியதோடு, கொடநாடு விவகாரத்தில் தாங்கள் என்ன செய்தீர்கள்? கூட்டத்தில் முன்னாள் அமைச்சரின் பெயர் இருக்குறது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம் என கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது. ஒரு தாதாவின் பிறந்தநாள் விழாவின்போது கத்தியால் கேக் வெட்டி கொண்டாடும் ஒரு சூழல் அதிகரித்ததும், நடைபெற்றதும், அதிமுகவின் ஆட்சி காலத்தில் தான் என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் துரைமுருகன். இப்படியாக இன்றைய தின விவாத கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இடையே காரசார விவாதம் நடந்தது.

Previous articleஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்!
Next articleஇந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு!