தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை!

0
154
Admission of students in Tamil Nadu music schools has started! Annual scholarship for students joining!
Admission of students in Tamil Nadu music schools has started! Annual scholarship for students joining!

தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.குறிப்பாக இரண்டாம் கட்ட அலையில் மக்கள் அதிக அளவு உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது.அதனை கடந்து தற்பொழுது மக்கள் மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.ஆனால் தற்பொழுது பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் ,தடுப்பூசி செலுத்தி கொள்வதிலும் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்தே காணப்படுகிறது.

அதனால் தமிழகத்தில் குறைந்த கட்டுப்பாடுகளுடன் அனைத்து துறைகளும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது.இந்த தருணத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் சென்று வருகின்றனர். ஏதேனும் பள்ளிகளில் ஒரு தொற்று பாதிப்பு காணப்பட்டால் விடுமுறை அளித்து மற்ற மாணவர்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கின்றனர்.அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசு இசைப் பள்ளிகலில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் செயல்படும் அரசு இசைப்பள்ளியில் மூன்றாண்டு பயிற்சிக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இசையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கும் படி கூறிவருகின்றனர்.கொரோனா தொற்று சற்று குறைந்ததால் தற்பொழுது அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.அதனைத் தொடர்ந்து இந்த ஏழு மாவட்டங்களில் செயல்படும் அரசு பள்ளிகளில் குரலிசை, நாதஸ்வரம், தவில் ,தேவாரம் ,பரதநாட்டியம் ,வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.தமிழக அரசு இசைப்பள்ளியில் விண்ணப்பிக்க ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது எனக் கூறியுள்ளனர். அதேபோல் 13 முதல் 25 வயதுக்குள் இருக்கும் ஆண் ,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளனர். இந்த வகுப்புகளில் சேர்வதற்கு ஆண்டுக்கு பயிற்சி கட்டணம் ரூ. 120 இன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த இசைப் பள்ளியில் சேர்வதற்கு உதவித்தொகையாக மாதம்தோறும் ரூ .400 என்ற விதத்தில் ஆண்டுக்கு பத்து மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் சென்று பயில்வதற்கு மாணவ மற்றும் மாணவிகளுக்கு பேருந்து பயணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. https :// www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் இது குறித்து ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் அறிந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.

Previous articleஇந்த ராசிக் காரர்களே உஷார்!! பண இழப்புக்கள் ஏற்படும்!
Next article5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு!