தமிழகத்தில் இதற்கு அனுமதி வழங்கிய மாநில அரசு! உஷார் படுத்தப்படும் மாவட்ட ஆட்சியாளர்கள்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் இதற்கு அனுமதி வழங்கிய மாநில அரசு! உஷார் படுத்தப்படும் மாவட்ட ஆட்சியாளர்கள்!

Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதன் காரணமாக, தமிழ்நாட்டில் திரையரங்கு, கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பலவும் மூடப்பட்டிருக்கிறது. ஆனால் தற்சமயம் நோய்த்தர்த்தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல நோய்த்தொற்று காரணமாக, விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் கிராமசபை கூட்டங்களும் நடைபெறாமல் இருந்தன.

இந்த நிலையில், எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று பல கட்டுப்பாடுகளுடன் கிராமசபை கூட்டம் நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் கூட்டம் நடைபெறும். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமசபை கூட்டங்களை திறந்தவெளியில் நடத்த வேண்டும் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை மனதில் வைத்து அதற்கேற்றவாறு இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு முன்னர் எல்லோருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஆறடி சமூக இடைவெளி இருப்பதையும், முகக்கவசம் அணிந்து இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று அறிகுறிகள் இருந்து தனிமைப் படுத்தப் பட்டவர்கள் மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என விதிமுறைகளை வகுத்து இருக்கிறது தமிழக அரசு.