மா.சுப்ரமணியனின் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! இந்த வாரமும் இது செயல்பட அனுமதி!
கொரோனா தொற்றால் கடந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டோம்.இந்த இழப்புகள் அனைத்தும் எந்த வித முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் நடைபெற்றது.அதனையடுத்து கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.முதலில் தடுப்பூசி போட மக்கள் முன் வரவில்லை.நாளடைவில் கொரோனா தாக்கத்தின் நிலையை கண்டு தடுப்பூசி போட முன் வந்தனர்.மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.அந்தவகையில் சில மாதம் முன் சில தடுப்பூசி முகாம்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
மீண்டும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை மனுக்களை வைத்து தடுப்பூசி வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் கொரோனா தடுப்பூசியை மக்கள் ஆர்வத்துடன் செலுத்திக்கொள்ள முன் வருவதற்கு பல விழிப்புணர்வுகளை எற்படுத்தினர்.அவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஒன்று தான் மெகா தடுப்பூசி முகாம்.இந்த முகாம் தொடங்குவதற்கு முன்னதாக,மக்கள் இந்த முகாம் மூலம் 23 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திகொள்வார்கள் என திட்டமிட்டனர்.ஆனால் அதற்கு மாறாக 25 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தற்போது அந்த முகாம்களை இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.அந்தவகையில் இந்த வாராமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.இந்த முகாம் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.அந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எவ்வளவு தடுப்பூசிகள் தேவைப்படுகிறது என்பதையெல்லாம் கேட்டு கொள்வர்.
அதனையடுத்து தடுப்பூசி செலுத்தாதவர்களை அறிந்து அவர்களுக்கு மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.இந்த செயல்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் முழு ஈடுபாட்டை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.அந்தவகையில் இந்த வாரமும் மெகா தடுப்பூசி முகாமானது ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.