நிராகரிக்கப்பட்ட அதிமுகவினர் வேட்புமனு! கடுமையான கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

0
154

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று முடிந்திருக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவினர் தாக்கல் செய்த மனுக்கள் பொய்க் காரணங்களைக் ஜோடித்து நிராகரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருக்கிறார். தேர்தலுக்காக தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அந்த விதத்தில் காஞ்சிபுரத்தில் இன்று பிரச்சாரம் செய்த அவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏதாவது ஒரு காரணத்தை தெரிவித்து அதிமுக வேட்பாளர்கள் உடைய மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக கெட்டுப் போய் இருக்கிறது, கொலைகள் அதிகரித்து இருக்கிற.து அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதாக பத்திரிக்கையாளர்கள் இடம் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக தியாகதுருவம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த அதிமுகவினர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது, இதனை கண்டித்து அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு போன்றோர் தேர்தல் நடத்தும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினார்கள். மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டசபை உறுப்பினர் பிரபு உள்ளிட்ட அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Previous articleசாட்டை சுழற்றிய சைலேந்திரபாபு! அதிரடி ஆபரேஷன் பிடிபட்ட ரவுடிகள்!
Next articleபீர் விலையில் பல்வேறு குளறுபடிகள்! நிறுவனங்களுக்கு கோடிகளில் விதித்த அபராதம்!