சபரிமலை மறுசீராய்வு மனுவின் அதிரடி தீர்ப்பு

0
245

சபரிமலை மறுசீராய்வு மனுவின் அதிரடி தீர்ப்பு

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் தீர்ப்பு சற்றுமுன் வெளியானது. இந்த தீர்ப்பின்படி சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய காலம் காலமாக தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டடு. இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழையலாம் என சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் ஒருசில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரளத்தை சேர்நத நாயர் சொசைட்டி, பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் என மொத்தம் 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மறு சீராய்வு மனுக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் விசாரணை செய்யப்பட்டு இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நான்கு நீதிபதிகள் என மொத்தம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வாசித்தது. இதில் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது

Previous articleஸ்டாலின் கைதானார் ஆனால் எதற்காக கைதானார்? மீண்டும் மிசா விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்
Next articleஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here