முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி

0
143

முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று முதல் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பமாகிறது. இந்தூரில் இன்று நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அந்த அணி இந்திய பந்துவீச்சாளர்களை பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சற்று முன்வரை 42 ஓவர்களில் 107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது

வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான இஸ்லாம் 6 ரன்களிலும், இம்ருல் காயிஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் மாமுனுல் ஹக் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார். அதன்பின் நட்சத்திர ஆட்டக்காரர்களான மிது மற்றும் முசாஃபிர் ரஹிம் ஆகியோர்களும் 13 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் ஷமி, அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். வங்கதேச அணியின் 4 முக்கிய விக்கெட்டுக்கள் வீழ்ந்துவிட்டதால் இன்றுடன் ஆல் அவுட் ஆக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Previous articleஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!
Next article9 வருஷமா விளையாடிய வீரரை தூக்கி வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி