அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தன்னுடைய மனைவி விஜயலட்சுமியின் மரணத்தால் சற்றே துவண்டு போய் தான் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவருடைய மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த சில வார காலமாக அவர் சென்னை பக்கமே வராமல் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார். அதாவது தன்னுடைய மனைவிக்கான ஈமச் சடங்குகளை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் தன்னுடைய சொந்த ஊரில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் செய்து வந்தார். அதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் இதே கருத்தை முன்வைத்து திமுக மீது குற்றம்சாட்டி வந்தார்.
இந்தநிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முதலமைச்சர் ஸ்டாலின் ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே செயல்படுகிறார் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதிமுகவினர் இடையே மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆணித்தனமாக சொல்லி வருகிறார். மறுபுறமும் அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதாவிற்கு இணையாக ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தெரிவிக்கிறார். ஒரே கட்சியை சார்ந்த இரு முக்கிய தலைவர்கள் இருவேறு கருத்துக்களை தெரிவித்து இருப்பது தமிழகம் முழுவதும் தற்சமயம் பேசுபொருள் ஆகி வருகிறது.
அதோடு தற்போது நடைபெற இருக்கக்கூடிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டுமே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இது சம்பந்தமாக இதுவரையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எந்த பகுதிக்கும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.
ஆகவே தொலைக்காட்சி விவாதங்களில் கூட அதிமுக இரட்டை தலைமையை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி என்ற ஒற்றை தலைமையின் கீழ் வந்துவிட்டதா உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தன்னுடைய மனைவியின் மரணத்தை தொடர்ந்து அவருக்கான காரியங்களை செய்வதற்காக தன்னுடைய சொந்த ஊரில் இருப்பதால் அவரால் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியவில்லை என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
மறுபுறமோ ஒரு கட்சியை சார்ந்த இரு முக்கிய தலைவர்கள் இருவேறு கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் அப்படி என்றால் இந்த கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. இன்னும் சிலர் கட்சியை சேர்ந்தவர்களே தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பின் எதற்காக நீங்கள் இந்த கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதோடு ஜெயலிதாவை தவிர்த்து அதிமுகவை கட்டுக்கோப்பாக எடுத்துச்செல்லும் திராணி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்டோருக்கு இல்லை என்றும், ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதனை உடைத்தெறியும் வகையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அப்படி என்றால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி என்ற ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட தொடங்கி விட்டதா? என்ற கேள்வியை தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரை தவிர்த்து அவர் காலத்திற்குப் பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஒற்றை தலைமையின் கீழ் தான் அதிமுக வீறுநடை போட்டு வந்தது. அவர் தலைமையின் கீழ் தான் பல சாதனைகளை புரிந்து அடுத்தடுத்த ஆட்சிகளையும் பிடித்தது. ஆனால் இதற்கு மாறாக தற்சமயம் அதிமுக இரு தலைமையின் கீழ் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அவற்றை தவிர்க்கும் விதத்தில் தற்சமயம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவருடைய செயல் வேகத்தை பார்த்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி என்ற ஒற்றை தலைமையின் கீழ் வந்துவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் தெரிவித்து வருகிறார்கள். மறுபுறமும் எடப்பாடிபழனிசாமி ஜெயலலிதாவிற்கு பின்னர் அதிமுகவின் ஆளுமை மிக்க ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ்தான் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலை சந்தித்தது அதிமுக ஆனால் அந்தத் தேர்தலில் அதிமுக ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வில்லை. இருந்தாலும் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையாவது அந்த கட்சி பெற்று இருக்கிறது.
ஆனால் இரட்டை தலைமையின்கீழ் அதிமுக சரிவர செயல்படவில்லை எனவும் ,மீண்டும் ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக கொண்டு வர பட வேண்டும் எனவும் ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்சமயம் எதிர்கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்.
ஆகவே ஜெயலலிதாவை அடுத்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி என்ற ஒற்றை தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.