நீதிமன்றம் சொன்னதை செய்ய தயாரா? தமிழக அரசை கேள்வி எழுப்பிய ஹெச் ராஜா!

0
100

தமிழக கோவில்களில் பக்தர்கள் தானமாகவும், காணிக்கையாகவும் வழங்கிய நகைகளை தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இதற்கு பாஜக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. ஆனால் இந்தத் திட்டத்தில் தூசி அளவுக்குக் கூட தவறுகள் நடைபெறாது எனவும், சேகர்பாபு கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், கோவில் நகைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக புதுக்கோட்டையில் அவர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றியபோது கோயில் நகைகளை உருக்க அனுமதி கொடுக்க கூடாது இது குறித்து மிக விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும் தமிழ்நாட்டில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுக்கவும், அமைச்சர் சேகர்பாபு நான் சந்திக்க தயார் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் பல திட்டங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும் என தெரிவித்து இருக்கிறார் எச் ராஜா.

இந்து மத மக்களின் தற்போதைய நிலை தொடர்பாக இயக்குனர் மோகன்ஜி அவர்களின் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி அவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. திட்டமிட்டு ஒரு சிலர் அந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்பட்டால் மத வழிபாடு தொடர்பான பாடம் வைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதனை தமிழக அரசு செயல்படுத்துமா என்று எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.