ஃப்ளே ஆஃப்பை உறுதிசெய்த பெங்களூர் அணி.! பரிதாபத்துடன் வெளியேறிய பஞ்சாப் அணி.!!

0
132

ன்று மாலை நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற 48 ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விராட் கோலி மற்றும் படிக்கல் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூர் அணி முதல் 8 ஓவர்களில் வேகமாக ரன்களை குவித்திருந்த நிலையில், விராட் கோலி 25 ரன்களுடனும், படிக்கல் 40 ரன்களுடனும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனையடுத்து, களமிறங்கிய மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியில் முகமது சமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், ஹென்றிக்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியுடன் ஆரம்பித்தது. இதில் கேஎல் ராகுல் 39 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 52 ரன்களுடனும் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக பஞ்சாப் அணி இறுதியில் 158 ரன்களை மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது. பெங்களூரு அணியில் சஹால் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Previous articleடாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு.! ஃப்ளே ஆஃப்க்கு முன்னேறுமா கொல்கத்தா.!!
Next articleருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்ட பாராட்டு கடிதம்!