விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி!
உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஒரு வன்முறை ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் பன்வீர் பூர் கிராமத்திற்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா வருகைதான். அதை அங்கிருந்த விவசாயிகள் எதிர்த்து உள்ளனர். அப்போது அந்த வழியாக மூன்று கார்கள் வந்ததாகவும், வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல்கள் நடந்ததாகவும் சொல்கின்றனர்.
அப்போது மூன்றாவது வாகனம் அதன் கட்டுபாட்டை மீறி விவசாயிகள் மீது ஏறி உள்ளது. அந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட காரில் வந்த பாஜாக ஆதரவாளர்கள் என தற்போது வரை 9 பேர் பலியாகியுள்ளனர். உத்தர பிரதேசத்தில் பெரும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற காங்கிரஸின் பிரியங்கா காந்தி நேற்று இரவு விமானத்தின் மூலம் சென்றார். ஆனால் அங்கிருந்து காரில் லக்கிம்பூர் மாவட்டம் சென்றவரை பன்வீர் கிராமத்திற்குள் நுழைய விடாமல் எல்லையிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதேபோல் சட்டிஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகெல் மற்றும் பஞ்சாப் துணை முதல் மந்திரி எஸ்.எஸ் ராந்த்வா ஆகியோரும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தற்போது கூறுகின்றன.
இதற்கிடையில் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற உத்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், அகிலேஷ் யாதவ் கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் திட்டமிட்டார். ஆனால் அவரையும் வீட்டை விட்டு வெளியே வராதபடி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதன் காரணமாக தனது வீட்டிற்கு முன்பாகவே சாலையிலேயே அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.