அடை மொழியை மாற்ற முயற்சி செய்யுங்கள்! ஆலோசனை வழங்கிய பூங்குன்றன் மகிழ்ச்சியில் சசிகலா!

0
114

தியாகத் தலைவி சின்னம்மா அழைத்துக் கொண்டு உள்ளார்கள் அதனை முதலில் மாற்ற முயற்சி செய்யுங்கள் என்று ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அவருடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பெயரில் ஒரு உந்து சக்தி உள்ளதாகவே நான் கருதுகின்றேன். தொடர்ச்சியாக அழைக்கும்போது சக்தி பிறக்கின்றது, அதனை நான் உணர்ந்து இருக்கிறேன போயஸ் தோட்டத்தில் வேலை பார்த்த சமயத்தில் ஓபிஎஸ் அவர்களை இனிஷியலோடுதான் எல்லோரும் அழைப்பார்கள் என்பது ஆச்சரியம் இதன் காரணமாக, தான் அவருக்கு உயர்வு கிடைத்து இருக்கிறது என மற்றவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஆச்சரியமாக பார்த்தேன். ஆனால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பின்னர் காலம் பாடத்தை எனக்கு போதித்த சமயத்தில் அதில் உண்மை உள்ளதாக நான் உணர்ந்து கொண்டேன். ஏன் என்றால் எத்தனை பெயரை நாம் இன்சியல் வைத்து அழைக்கின்றோம்? என்று எண்ணிப் பாருங்கள் மிகவும் குறைவு தான் ஒருவருடைய பெயரை மட்டுமே நாம் அழைத்துக் கொண்டு இருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறார்.

இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினை தளபதி என்றுதான் அழைத்து வந்தார்கள், இதனால்தான் அவர் இதற்கு முன்னர் தளபதி ஆகவே இருந்து விட்டார். செயல் தலைவராக பொறுப்பேற்ற பின்னரும் தளபதி என்றே பலரும் அழைத்து வந்தார்கள், எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார் பழனியில் அவரிடம் தலைவர் என்பதை நடைமுறைப்படுத்த சொல்லுங்கள் அதுவே வெற்றியைத் தேடித்தரும் தளபதி என்பதன் பொருள் அரசனுக்கு அடுத்து அதாவது தளபதி அவ்வளவுதான் என்பது நான் நண்பரிடம் தெரிவித்த கருத்தை அவருக்கு தெரிந்த குடும்பத்தினரிடம் கூறினாரா? என்பது எனக்கு தெரியாது ஆனால் மனதில் தோன்றியதை நான் சொல்லியே ஆகவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் ஒரு இளைஞர் ஒருவரை சந்தித்தேன் அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது, இளையவராக இருந்தாலும் கூட நடக்கும் எதார்த்தத்தை புரிந்து கொண்டவராக தான் அவர் என் கண்ணுக்கு தெரிந்தார் அதை விட உண்மையை சொல்லும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவரிடத்தில் இருந்தது. என்ன நடக்க இருக்கிறது என்பது அவருடைய உள்ளத்துக்கு தெரிந்து இருந்தது சூழ்நிலையே எல்லாவற்றிற்கும் அடிப்படை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் இடத்தில் இருந்தால் தான் இன்றைய அரசியல்வாதிகள் மதித்து நடக்கிறார்கள். இரு பக்கமும் பேசி நாடகம் ஆடுபவர்களை தான் தலைவர்களும் விரும்புகிறார்கள் வாசகர்களை வரவேற்கும் உள்ளம் நலன் கருதி ஒதுங்கி போகிறவர்களை மதிக்க தவறி விடுகிறது என கூறியிருக்கிறார். புரிந்து கொள்ள மறுக்கின்றது பதவியும், பணமும் இல்லை என்றால் இன்றைய தினம் அரசியல் செய்ய இயலாது நம்முடைய காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். என என்னுடைய அரசியல் அனுபவத்தை அவருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன் என குறிப்பிட்டிருக்கிறார் பூங்குன்றன்.

சூழல் சரியாக இருக்க வேண்டும் அல்லது சூழலை சரியாக அமைத்திடவேண்டும் சூழலை மாற்ற நினைப்பது விவேகம் என்று சொன்னார் அந்த இளைஞர். சூழல் மாறினாலே சுபிக்ஷங்கள் வருகை தரும் என தெரிவித்தேன் நான் அவருடைய பேச்சிலிருந்து அவரை புரிந்து கொண்டேன். நான் அவரிடம் ஒன்றை தெரிவித்தேன் தியாகத் தலைவி என்று சின்னம்மாவை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதனை முதலில் மாற்ற நினையுங்கள், தியாகத்தின் அர்த்தம் என்ன தியாகியாக இருக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? விரும்புகிறீர்களா? வேறு ஒரு நல்ல அடைமொழியை உருவாக்க முயற்சி செய்யுங்கள் என தெரிவித்தேன். இந்த அட மொழியானது அவர்கள் விரும்பும் சிறப்பை கொடுக்காது என்பது என்னுடைய கருத்து என தெரிவித்த அவர், முடிவு என்பது காலத்தின் கையில் இருக்கிறது முடிவு சூழ்நிலையைப் பொறுத்தே அமைகின்றது உதவும் எண்ணம் இருந்தாலும் காலம் அனுமதிக்கவேண்டும். கடவுள் அதற்கு வழியும் விடவேண்டும் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அல்லவா நல்லது நடக்க வேண்டி இறைவனிடம் முறையிட சென்றேன் என பதிவிட்டிருக்கிறார் பூங்குன்றன்.

Previous articleகலகலப்புடன் வெளியான பிக் பாஸ் 5 சீசனின் இரண்டாவது புரோமோ.!!
Next articleவெளியான மூன்றே நாட்களில் வசூல் சாதனை செய்த ருத்ர தாண்டவம்.!!