சூர்யா-ஜோதிகா திரைப்படமான உடன்பிறப்பே டிரெய்லர் வெளியீடு.!!

0
220

நடிகை ஜோதிகா மற்றும் சசி குமார் நடித்துள்ள உடன்பிறப்பே என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா மற்றும் சசிகுமார் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், இந்தப்படத்தில் கலையரசன், சமுத்திரக்கனி மற்றும் சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 16ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleபிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!!
Next articleமுதலிடத்தை பிடிக்க போவது யார்.? டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பவுலிங் தேர்வு.!!