உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

0
121

தமிழகத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்று இறுக்கமாக இருந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது

அதன்படி இன்று ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.35,304க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,413க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 65,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 குறைந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 65,200க்கு விற்பனையாகிறது. இதன்மூலம், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65. 20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.