ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிமுகம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய் நடித்த தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
அதனை தொடர்ந்து இவர் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது காதலனை அறிமுகம் செய்துள்ளார். இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பதிவில் இந்த ஆண்டு நீங்கள் எனக்கு மிகப்பெரிய பரிசு.! என் வாழ்க்கையில் வண்ணம் சேர்த்ததற்கு நன்றி, என்னை இடைவிடாமல் சிரிக்க வைத்ததற்கு நன்றி, நீ நீயாக இருப்பதற்கு நன்றி என்று குறிப்பிட்டு தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CU1x-zyq5L0/?utm_source=ig_web_copy_link