டி 23 என்னும் பெயர் கொண்ட புலி ஒன்று யார் கையிலும் மாட்டாமல் வனத்துறையினரை ஆட்டம் காண வைத்து கொண்டு இருக்கிறது.
நீலகிரி கூடலூரை அடுத்த மசினகுடி வனப்பகுதியில் புலி ஒன்று அடுத்தடுத்து 3 பேரை அடித்து கொன்றது. மேலும் 30 மேற்பட்ட மாடுகளையும் கொன்றது.
இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் புலியை பிடிக்க ஆயத்தமாகினர்.
சென்னை உயர் நீதிமன்றம் புலியை உயிருடன் மட்டுமே பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
வன துறையினர் காடு முழுக்க கேமரா வைத்து, மரங்களின் மீது பரண் அமைத்து புலியை பிடிக்க இரவும், பகலும் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் இரு இனங்களுக்கு முன் அந்த புலி கேமெராவில் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து புலியை கண்காணித்து அதற்க்கு மயக்க ஊசியும் செலுத்தப்பட்டது.
மயக்க ஊசி செலுத்தியும் புலி அங்கிருந்து தப்பித்து ஓடியது. எனினும் மயக்க ஊசி செலுத்தியதால் புலி சோர்வாக இருக்கும் என்பதால் புலியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
புலி சிக்கும்வரை கால்நடை மேய்ச்சலுக்கு யாரும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.