தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்ற தலைவர் 21 வயது சாருகலா.!!என்னுடைய ரோல் மாடல் இவர் தான்.?

0
74

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதற்கான வாக்குகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன இதில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது அதிமுக படுதோல்வி அடைந்தது.

இந்தத் தேர்தலில் குறிப்பாக 21 வயது பெண்ணான சாருகலாவும், 90 வயது மூதாட்டி பெருமாத்தாளும் அதிக அளவில் பேசப்பட்டனர். 90 வயதான பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்க செய்து ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொறியியல் பட்டதாரியான 21 வயது சாருகலா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சாருகலா எங்களுடைய கிராமத்தில் மக்களின் அன்றாடத் தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே நான் பொறுப்பேற்ற இன்னும் ஆறே மாதத்தில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றும். கிராமத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து வைப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும், அரசியலில் என்னுடைய ரோல் மாடல் மற்றும் இன்ஸ்பிரேஷன் கலைஞர் ஐயா தான் அவர் வழியில் நடந்து சமத்துவமாக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.