சினிமாவில் அறிமுகமாகும் ‘தெய்வமகள்’ அன்னியாரின் மகள்.!! இவருக்கு இப்படிப்பட்ட மகளா.!!

0
204

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகின்ற ரேகா கிருஷ்ணப்பாவின் மகள் பூஜா கிருஷ்ணப்பா தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இது குறித்த தகவலை ரேகா கிருஷ்ணப்பா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், ஹீரோயினாக அறிமுகம் ஆவதற்கு முன்பு பூஜா கிருஷ்ணப்பா நடத்திய கிளாமர் போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலாக இருந்தது தெய்வமகள். இந்த சீரியலில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். சின்னத்திரையிலிருந்து முன்னேறிய அவர் தற்போது வெள்ளித்திரையில் கால்பதித்து வெற்றி நாயகியாக திகழ்ந்து வருகிறார். இதில் வில்லி கதாபாத்திரத்தில் அண்ணி அழகாக நடித்து வந்தவர் தான் ரேகா. இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தாலும் கூட இவரது நடிப்பு திறமையை அனைவராலும் பாராட்டப்பட்டது.

சில காலம் எந்த சீரியல்களிலும் தலை காட்டாமல் இருந்த ரேகா தற்போது நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகின்றார். ஆனால் இவருக்கு பெயரையும், புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது தெய்வமகள் சீரியல் தான். தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற தொடர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது தெய்வமகள் சீரியல் தான்.

இந்த நிலையில் தற்போது ரேகா கிருஷ்ணாப்பாவின் மகள் பூஜா வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் பூஜா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது. தற்போது தனது மகளின் கிளாமர் புகைப்படங்களை தானே வெளியிட்ட ரேகா அவர் வெள்ளித்திரையில் அறிமுகமாக போவது குறித்து மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CVAFF6ssxMm/?utm_medium=copy_link

Previous articleசசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!!
Next articleவிஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகும் ‘பாக்கியலட்சுமி’ஷீரோ எழில்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here