எக்ஸ்பிரஷனில் கொன்று சாய்க்கும் சாய்ப்பல்லவி.! ‘சாரங்க தரியா’ முழுப்பாடல் வெளியீடு.!

மலையாள திரைப்படம் ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர் .

அதன்பிறகு சாய் பல்லவி மாரி-2, தியா, மற்றும் என்.ஜி.கே ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் இவர் நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி வெளியாகி பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அந்தப் படத்தில் இடம் பெற்று சூப்பர் ஹிட்டான ‘சாரங்கதரியா’ வீடியோ பாடல் யூ டியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலில் நடிகை சாய் பல்லவியின் க்யூட்டான நடனம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Leave a Comment