விவாகரத்திற்கு பிறகு முதல்முறையாக வெளியில் வந்த சமந்தா.!! வைரலாகும் புகைப்படம்.!!

0
120

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இவருடைய விவாகரத்துக்கு பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இருந்தபோதிலும், விவாகரத்துக்கு சமந்தா தான் காரணம் என்றும் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார். என்றும் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என்றும் அவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது போன்ற எதிர்மறையான சூழலிலிருந்து விலககும் விதமாக சமந்தா திரைப்படங்களில் மறுபடியும் நடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக அவர் வெளியில் எங்கும் சென்றதாக தெரியவில்லை அது குறித்த புகைப்படங்களோ, தகவல்களோ எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான் வளர்க்கும் செல்லப் பிராணிகளான இரண்டு நாய்களுக்கும் உடல்நிலை சரியில்லை என கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்து வைத்தியம் பார்த்து உள்ளார் சமந்தா. தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தனது விவாகரத்துக்கு பிறகு சமந்தா தற்போதுதான் முதல் முறையாக வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎக்ஸ்பிரஷனில் கொன்று சாய்க்கும் சாய்ப்பல்லவி.! ‘சாரங்க தரியா’ முழுப்பாடல் வெளியீடு.!
Next articleஅண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்.!!