இன்று ஆரம்பமாகிறது ஐசிசி டி20 உலக கோப்பை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

0
229

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன.

இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

இன்று ஆரம்பமாகிறது ஐசிசி டி20 உலக கோப்பை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

மேலும், மற்ற 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இதில் உள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘எ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூகினியா அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இன்று ஆரம்பமாகிறது ஐசிசி டி20 உலக கோப்பை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

உலக கோப்பை தொடக்க நாளான இன்று பி பிரிவில் ஓமன்-பப்புவா நியூ கினியா அணிகள் மாலை 3:30 க்கும், வங்காளதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் இரவு 7:30 க்கும் என இரண்டு போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.

இன்று ஆரம்பமாகிறது ஐசிசி டி20 உலக கோப்பை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

மேலும், இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு விளையாடுகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.

Previous articleரூ. 36,900 சம்பளத்தில்..தமிழக அரசு வேலை வாய்ப்புகள் அறிவிப்பு.!! உடனே விண்ணப்பியுங்கள்.!!
Next articleகேரளாவில் கனமழை..சபரி மலைக்கு செல்ல தடை விதிப்பு.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here