ஆளுனரை சந்திக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்

0
156

ஆளுனரை சந்திக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காததால் சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், ஆட்சியமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார். இதனையடுத்து இன்று மாலை சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுநரை சந்திக்க திட்டமிடப்பட்டி அதற்கான அப்பாயின்மெண்ட்டும் வாங்கப்பட்டது

இந்நிலையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுனரை சந்திக்கும் முன் மூன்று கட்சி தலைவர்களும் இணைந்து குறைந்த பட்ச செயல் திட்டத்தை இறுதி செய்வது குறித்து விவாதிக்கவுள்ளதாகவும், குறைந்தபட்ச செயல்திட்டம் தயாரானதும் நாளை சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளதாகவும் அதன்பின்னரே ஆளுனரை சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக இருந்து வரும் குழப்பம் மேலும் நீட்டித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleதிமுக ஆட்சிக்கு வந்ததும் கைதாகும் முதல் மூன்று நபர்கள்: முக ஸ்டாலின்
Next articleஉள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு