மீண்டும் கிராமி விருது வெல்லப்போகும் ஏ ஆர் ரகுமான்.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

0
197

உலக அளவில் இசைக்காக பிரத்தியோகமாக வழங்கப்படும் கிராமி விருதுகளின் பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இடம் பெற்றுள்ளது.

உலகளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருது உயரிய விருதாக கருதப்படுவது போல, இசைத்துறையில் கிராமி விருதுகள் உயர்ந்ததாக கருதப்படுகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் கிராமி விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டின் கிராமிய விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த மிமி படத்தின் பாடல்கள் தேர்வாகியுள்ளது. இந்த படத்தில் க்ரித்தி சனோன், பங்கைஜ் திரிபாதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும், இந்த பாடத்தில் இடம்பெற்றுள்ள ‘பரம சுந்தரி’ என்ற பாடல் சமீபத்தில் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு மீண்டும் சர்வதேச விருது கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Previous articleசின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்!
Next articleபள்ளிகள் திறப்பதில் தாமதமா? அரசு வெளியிடும் அறிவிப்பை எதிர்நோக்கும் நிர்வாகம்!