உலக பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது.
பெட்ரோல் விலையை பெரிதாக பேசி கொண்டிருக்கும் நாம் டீசல் விலையை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து 100ஐ நெருங்கி கொண்டிருக்கிறது.
பெட்ரோல் விலையானது கடந்த ஜூலை மாதம் 100ஐ தொட்டு அதன் பின்னர் படிப்படியாக ஆகஸ்ட் இறுதி வாரங்களில் குறைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் உயர ஆரம்பித்த பெட்ரோல் விலை இப்போது ரூபாய் 103 ஆக உள்ளது.
பெட்ரோல் இதுவரை 3 ரூபாய் 72 காசும், டீசல் 4 ரூபாய் 53 காசும் உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே டீசல் விலை 100ஐ அடைந்து விட்டது குறிப்பிடதக்கது.