காதலியை பார்க்க மாறுவேடத்தில் வந்த இளைஞருக்கு தர்ம அடி.!!

Photo of author

By Vijay

வேலூரில் காதலியை சந்திப்பதற்காக இரவு நேரத்தில் பர்தா அணிந்து சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியான அன்பழகன் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால், அதை மறைத்து தனியார் மருத்துமனையில் பணியாற்றும் பெண் ஒருவரை காதலித்து உள்ளார்.

இந்நிலையில், இரவு பணியில் இருந்து வீடு திரும்பிய தனது காதலியை சந்திக்க பெண்கள் அணியும் பர்தாவை அன்பழகன் அணிந்துள்ளார். இரவு நேரத்தில் வீதியில் நடந்து சென்ற அவர் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் அவருடைய உடல்மொழியும், காலில் அணிந்திருந்த ஆண்களின் காலணியும் கண்டு அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

அவரை அழைத்து விசாரித்தபோது பர்தாவுக்குள் இருப்பது ஆண் என்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து அன்பழகனை திருடன் என்று சந்தேகித்த பொது மக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தனது காதலிக்கு இன்பஅதிர்ச்சி கொடுப்பதற்காக பெண் வேடமிட்டு வந்ததாக அவர் கூறினார். படுகாயமடைந்த அன்பழகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.