மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது, அதில் ஒன்று தான் ‘இல்லம் தேடி கல்வி’.
இந்த திட்டமானது சில தினங்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு மாலை பள்ளி முடிந்ததும் தன்னார்வலர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் பணியாக கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிப்படிப்பிலிருந்து இடை நின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இடை நின்ற மாணவர்களுக்கும் கல்வி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 மாணர்வர்களுக்கு 1 தன்னார்வலர் என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னார்வலர்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறது.