தீபாவளியையொட்டி மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.!!

0
223

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மதுவகைகள் சப்ளை செய்வது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சில்லறை கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் ஒரு வாரத்திற்குத் தேவையான மது வகைகள் மட்டுமே இருப்பு வைக்கப்படும்.

ஆனால், பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இப்போதே மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதால், கடைகளுக்கு சப்ளையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக விற்பனை செய்யும் கடைகளில் பத்து நாட்களுக்கும் மேல் தேவையான பீர் மற்றும் மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தமிழக மதுப் பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleடி20 உலகக் கோப்பை தொடர்! இன்று தொடங்கும் சூப்பர் 12 ஆட்டங்கள்!
Next articleகுழாயடி சண்டை, அதிர்ந்த பெண் வீட்டார்!! நின்று போன திருமணம், இளைஞர் வேதனை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here