தினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு!

Photo of author

By CineDesk

தினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு!

CineDesk

Updated on:

தினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு!

அதிமுகவில் இருந்து பிரிந்து ’அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய தினகரன் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக முன்னணி தலைவர்கள் வெளியேறி வருகின்றனர்.

செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பல முன்னணி முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது தினகரன் ஆதரவாளரும் அவருடைய வலது கையை போல் இருந்தவருமான புகழேந்தியும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார்.

இதுகுறித்து புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் தஞ்சையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தஞ்சையில் அமமுக கலைத்து விட்டதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், தொடர்ந்து கட்சியை நடத்தினால் வழக்கு தொடருவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தங்களை கேட்காமல் அமமுகவை அங்கீகரிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.

அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் பொய் சொல்ல சொன்னார் என்றும் அதனால்தான் நாங்கள் பொய் சொன்னோம் என்றும் கூறிய புகழேந்தி, அமெரிக்காவில் இருந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகம் வந்த பின்னர், ஓபிஎஸ் மட்டும் ஈபிஎஸ் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்த ஒரே முக்கிய தலைவராக இருந்த புகழேந்தியும் அக்கட்சியிலிருந்து வெளியேறி இருப்பதால் தினகரன் தனிமரமாக உள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.