தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும்- திருமாவளவன் சர்ச்சை பேச்சு.!!

0
186

தமிழகத்திற்கே தனிக்கொடி அறிவிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசினார். அப்போது பேசிய அவர் ” மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழக அரசு கொண்டாட வேண்டுமென்றும் தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இது போன்ற கோரிக்கைகள் எழுப்பி அங்கு பிரிவினைவாதிகள் கலவரங்களை ஏற்படுத்தி அங்கு வாழும் மக்கள் நிம்மதியை இழந்து தீவிரவாத பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்திற்கு தனிக்கொடி போன்று திருமாவளவன் பேசியது பிரிவினையை தூண்டுவது போல் உள்ளது என சமூக வலைதளங்களில் பலரும் திருமாவளவனை விமர்சனம் செய்து வருகின்றனர்‌.

Previous articleஆளுநரை அடித்த மர்ம நபர்!
Next articleபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த விவரம்-வெளியான தகவல்‌!!