தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

0
106

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த வாரம் மேற்கு தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்து வந்தது.

இதனால் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும்,கேரளாவில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நிரம்பி வருகிறது. இதனால் வைகை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்றில் இருந்து தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக உள்ளது.

அதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, மதுரை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய நாளை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் தீவிரமாகமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Previous articleநெல்சனை லெஃப்ட் ரைட் வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம்!! படாதபாடுபடம் ஜாலி இயக்குனர்!!
Next articleஇதை விண்ணப்பிக்க நவம்பர் 10ஆம் தேதியே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!