மதிமுக தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் நடத்தி அதனடிப்படையில் தன்னுடைய மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கினார் வைகோ. இந்த சூழ்நிலையில், துரை வைகோ தந்தை உடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அதன் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் துரை வைகோ பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது கடந்த 6 மாதகாலமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருக்கிறது தேர்தல் அறிக்கையில் கொடுத்த 500 வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். கடந்த பத்து வருட காலமாக தமிழக அரசியல் மற்றும் பொது மக்களின் தேவைகள் உள்ளிட்டவற்றில் தேக்க நிலை இருந்தது. தற்சமயம் தமிழகம் வளரத் தொடங்கியிருக்கிறது. என்னை நன்றாக பணியாற்றுங்கள் என்று முதலமைச்சர் வாழ்த்தினார் வலதுசாரி சித்தாந்தத்துக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை நான் முன்னெடுப்பேன் என கூறியிருக்கிறார் துரை வைகோ.
தலைமை கழக செயலாளராக என்னுடைய பணிகள் என்ன என்பதை நான் பிறகு சொல்கின்றேன் பெரியாரும், பெருமாளும் ஒன்று என நான் சொன்னது பெரியாரால் தான் நாம் என்று எல்லோரும் கோவிலுக்கு செல்ல இயல்கிறது அதனை மனதில் வைத்து தான் நான் அவ்வாறு சொன்னேன் நான் இறை நம்பிக்கை உள்ளவன் தான் என அவர் கூறியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் உடனான சந்திப்பு க்கு முன்பாக துரை வைகோ அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.