முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

0
80

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பராமரிப்பு பணி குறித்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி ஏடிஎம்கே மில்கர் தலைமையிலான அமர்வு விசாரணை செய்து வருகிறது நேற்றைய தினம் நடந்த விசாரணையின்போது மனுதாரர் ஜோசபின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூ ஆஜரானார் கேரள மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக, நீரின் அளவு அதிகரித்திருக்கிறது இதன் காரணமாக 50 இலட்சம் நபர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை மிக விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொழிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா இந்த வழக்கு குறித்த மத்திய அரசு நிலவர அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது அணையில் எவ்வளவு நீரைத் தேக்க வேண்டும் என்பது குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்பு குழுவின் கேட்டு பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு நீதிபதிகள் மனுதாரரின் கவலையை புரிந்து கொண்டு மத்திய அரசு மிக விரைவில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.

கேரள மாநில அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜி பிரகாஷ் மாநிலத்தில் நிலவும் பருவ மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை போல முல்லை பெரியாறு அணையில் நீரை 139 அடி வரையில் தேக்கிவைக்க தமிழக அரசுக்கு இந்த முறையும் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலை 9:௦௦ மணி நிலவரத்தின் அடிப்படையில் அணையில் நீர் இருப்பு 130 7.2 அடியாக இருக்கிறது உச்சநீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க தமிழக அரசுக்கு உரிமை இருக்கிறது என வாதிட்டார். அந்த சமயத்தில் கேரள அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரையில் தற்போது இருக்கக்கூடிய நீரின் அளவை தொடர்ந்து இருக்கச் செய்ய வேண்டும், தமிழக அரசுக்கு அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அணைக்கான நீர் வரத்தை விட திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அடிப்படையில் இடுக்கி மாவட்டத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு மழை பெய்வது குறைந்த அளவே சாத்தியமாக இருக்கிறது. அணையில் நீரைத் திறந்து விடுவது தொடர்பாக கேரள முதலமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என தெரிவித்திருக்கிறார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் விவாதிப்பதை விட இதில் தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விவாதிக்க நீதிமன்றம் அரசியல் மேடை அல்ல இது பொதுமக்களின் உயிர்கள் தொடர்புடைய விவகாரம் தற்சமயம் நிலவி வரும் பருவ மழையை கருத்தில் வைத்து முல்லை பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரை தேக்கி வைக்கலாம் என்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து கண்காணிப்புக் குழுவிடம் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து ஓரிரு தினங்களில் கண்காணிப்புக்குழு முடிவை மேற்கொள்ள வேண்டும் விசாரணையை நாளை மறுதினம் ஒத்தி வைக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்கள்.