இன்றைய (27-10-2021) ராசி பலன்கள்
மேஷம்
தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். புதுமையான நாள்.
ரிஷபம்
விருந்தினர்களின் வருகை உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தனவரவுகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆதரவுகள் கிடைக்கும் நாள்.
மிதுனம்
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே பொழுதுகளை செலவு செய்து மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் துளிர் விடும். விவேகம் வேண்டிய நாள்.
கடகம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மேன்மை ஏற்படும். உடல் நிலையில் சோர்வும், மந்தநிலையும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அனுபவங்கள் அதிகரிக்கும் நாள்.
சிம்மம்
செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பால் லாபம் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மூத்த சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேலோங்கும். இன்பமான நாள்.
கன்னி
மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். நண்பர்களின் உதவியால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நன்மைகள் மேம்படும் நாள்.
துலாம்
புதிய முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மேன்மை உண்டாகும் நாள்.
விருச்சிகம்
தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம். செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவீர்கள். நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுக்கள் கைகூடுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
மகரம்
வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். உயர்வு உண்டாகும் நாள்.
கும்பம்
இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சுதந்திரமான நாள்.
மீனம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான நிலைகள் குறையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.