மூன்றாம் பாலினத்தோருக்கு, போலீசார் எச்சரிக்கை

Photo of author

By Parthipan K

மூன்றாம் பாலினத்தோருக்கு, போலீசார் எச்சரிக்கை

Parthipan K

மூன்றாம் பாலினத்தவர்கள் நிலையானது கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும் தற்போது நல்ல முன்னேற்றத்தையே கண்டுள்ளது.

இவர்கள் தற்போது எல்லா துறைகளிலும் தங்கள் கால் தடங்களை பதித்து வருகின்றனர்.

காவல் துறை தொடங்கி, சுய தொழில் வரை அத்தனை இடங்களிலும் இவர்கள் கலக்கி கொண்டிருக்கின்றனர்.

ஒரு சாரார் இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்க சில இடங்களில் இன்னும் பிறர் கை ஏந்தும் நிலையிலேயே ஒரு சாரார் இருந்து வருகின்றனர்.

கடைகளில், கோவில்களில், தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில், கடற்கரையில் என மற்றவர்களிடம் பணம் வாங்கும் பழக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

இதில் சிலர் பொது மக்களை மிரட்டும் தோனியில் பணம் கேட்பது, பணம் கொடுக்கவில்லை என்றால் தகாத வார்த்தைகளில் திட்டுவது என அத்து மீறுகின்றனர்.

பொதுமக்கள் சிலர் இவர்களை பார்த்து பயந்து பணத்தை கொடுத்து விடுகின்றனர். ஒரு சிலர் இவர்களிடம் வாக்குவாதம், தகராறு என பிரச்சனையில் இறங்குகின்றனர்.

இதுக்குறித்து போலீசார் தற்போது ஒரு முடிவெடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் திருநங்கைகள் மார்க்கட், வாரச்சந்தை போன்ற இடங்களில் மக்களை மிரட்டி, தகாத வார்த்தைகளில் பேசி பண வசூலில் ஈடுபடுவதாகவும், மேலும் அரக்கோணம்-ஜோலார்பேட்டை ரயிலில் ஏறி பண வசூலில் ஈடுபடுவதாகவும், வடமாநில இளைஞர்களை குறி வைத்து பணம் வாங்குவதாகவும் புகார் எழுந்துள்ளதாக கூறினார்.

மேலும் நேற்று ஜோலார்பேட்டையில் திருநங்கைகளுக்கான ஆலோனை கூட்டத்தை நடத்தினர்.

ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தாலோ, பண வசூலில் ஈடுபட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.