முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி!

0
132
Beheading due to previous hostility! Enter the house on graduation day!
Beheading due to previous hostility! Enter the house on graduation day!

முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி!

கலபுரகி மாவட்டத்தில் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் இவரது கிரண். இவரது சகோதரர் மகேஷ் என்ற 27 வயதான நபர். இருவருக்கும் திருமணம் ஆனாலும் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் அவர்களது வீட்டில் சகோதரர்களான கிரணும், மகேஷும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென்று மகேஷை சரமாரியாக ஆயுதங்களின் மூலம் தாக்க ஆரம்பித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகோதரர் கிரண் தம்பியை காப்பாற்ற முயன்றார். ஆனால்  அப்போது அவரையும் மர்ம நபர்கள் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மகேசை கத்தியால் குத்திய அவர்கள், அவரது கழுத்தையும் அறுத்து விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மகேஷ் துடிதுடித்து உயிரிழந்தார். கிரணும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அதன் பின் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரணும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணையில் கொலை செய்தது பிரபல ரவுடி சாகர் மற்றும் அவரது கூட்டாளிகள் என்றும் தெரிவித்துள்ளனர். சாகருக்கும் மகேஷின் தாயார் மல்லமாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அது குறித்து சாகரிடம் மகேஷ் கேட்டிருந்தார்.

இந்த விசயத்தின் காரணமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி உட்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்ட பகலில் வீடு புகுந்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமுல்லைப் பெரியாறு அணை விவகாரம்! யாரும் பயம் கொள்ள வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின்!
Next articleதினகரனுடன் நெருக்கமாகும் ஓபிஎஸ்! கட்சியில் இருந்து தூக்கி எறிய தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி?