தன்னுடைய காதலுக்காக ஜப்பான் ராஜ குடும்பத்தை சேர்ந்த இளவரசி தன் அரச குடும்ப தகுதி அத்தனையையும் தூக்கி எரிந்து இருக்கிறார்.
ஜப்பானின் அரச குடும்ப விதிகளின் படி அரச குடும்பத்தை சேர்ந்த ஆண் சாமானிய பெண்ணை திருமணம் செய்தால் அவருடைய எந்த அரச தகுதியும் பறிக்கப்படாது.
ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாமானிய ஆணை திருமணம் செய்தால் அவர் அந்த அரச குடும்ப தகுதிகளை இழக்க நேரிடும்.
ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த மக்கோ தனது பள்ளி பருவ நண்பர் கொமுருவை காதலித்து இருக்கிறார், மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்ய 2018 லேயே முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் கொமுருவின் குடும்பத்தில் அப்போது நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அவர்களால் திருமணம் செய்து .கொள்ள முடியவில்லை.
தற்போது கொமுருவை திருமணம் செய்து கொள்வதற்காக மக்கோ தனது அரச குடும்ப விதிகளின் படி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
கடந்த செவ்வாய் அன்று காலை நேரப்படி 10 மணியளவில் மக்கோ தனது வீட்டை விட்டு வெளியேறினார், வீட்டிலிருந்து வெளியேறும் போது மக்கோ தனது பெற்றோருக்கு பலமுறை வணக்கம் சொல்லி விட்டு, தனது சகோதரியை ஆரத்தழுவி விட்டு சென்று இருக்கிறார்.
அரசு விதிகளின்படி இது போன்று வெளியேறுபவர்களுக்கு கொடுக்கப்படும் தொகையான 150 மில்லியன் டாலரையும் மறுத்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் அமெரிக்காவில் குடியேற இருக்கிறார்கள், கொமுரு அமெரிக்காவில் வழக்குரைஞராக இருக்கிறார்.
இது போலவே இந்த ஆண்டில் பிரிட்டன் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகனுக்காக அரண்மனையை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.