ராதிகா வீட்டில் பஞ்சாயத்துக்கு வந்த ராமமூர்த்தி.! ‘மானங்கெட்டு போயிடுவ’ கோபிக்கு அர்ச்சனை.!

0
252

கோலிவுட்டில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு வரவேற்பு தொலைக்காட்சி சீரியல்களுக்கு இருக்கிறது. திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகர் மற்றும் கதாபாத்திரங்களை கூட தியேட்டரை விட்டு வெளியில் வந்த சிறிது நேரத்தில் பலரும் மறந்து விடுவார்கள்.

ஆனால் தொலைக்காட்சி சீரியலில் ஒளிபரப்பாகும் கதாபாத்திரங்கள் அவ்வளவு எளிதில் மக்கள் மனதிலிருந்து நீங்குவது இல்லை. அப்படி சீரியல்களில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். நிறைய ரசிகர் கூட்டத்தை பெற்ற சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல்.

இல்லத்தரசியான பாக்கியலட்சுமி தனது கணவனால் அனுபவிக்கும் கொடுமைகளை எடுத்துரைக்கும் விதமாக இந்த சீரியல் அமைந்திருக்கும். இதில் தற்போது பாக்யலட்சுமி புதிதாக பிஸினஸ் ஒன்றை துவங்கி நடத்தி வருகின்றார். இதனால் சமீபத்தில் அவர் பல்வேறு பிரச்சினைகளை கூட அனுபவித்தார்.

பாக்கிய லட்சுமியின் கணவனான கோபி தனது முன்னாள் காதலி‌ ராதிகாவுடன் பழகுவதை ராமமூர்த்தி பார்த்துவிடுகிறார். இதனால் கோபி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தி இரவு வீட்டிற்கு வந்ததும் கோபியை கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கிறார்.

ஆனால் கோபி மீண்டும் மீண்டும் பொய்களை அள்ளி வீச கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ராமமூர்த்தி பின்னர் கோபியை படு மோசமாக மானங்கெட்டவனே என்று திட்டுகிறார்.

பின்னர் மறுநாள் காலை பாக்கியலட்சுமி தான் ராதிகா வீட்டுக்கு சாப்பாடு கொடுக்க செல்வதாகக் கூற நான் கொடுக்கிறேன் என்று வாங்கிக் கொண்டு செல்லும் ராமமூர்த்தி ராதிகாவிடம் பஞ்சாயத்து வைக்கிறார். இன்றைய எபிசோடு இந்த காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது., இது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகாதலுனுக்காக அரச குடும்ப தகுதியை தூக்கி எறிந்த இளவரசி!
Next articleமதுவுக்கு அடிமையான பெண்கள்! உணவு விடுதியில் செய்த களேபரம்! அதிரடி காட்டிய போலீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here