உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!

Photo of author

By Rupa

உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி , விஜயதசமி ஆகியவை பல கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் நடந்து முடிந்தது.அதேபோல தொற்று விரைவில் பரவக்கூடிய மற்றும் அதிக மக்கள் கூடும் உள்ள இடங்களை முன்கூட்டியே எச்சரித்து அதிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வந்தனர்.

அதேபோல வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. மக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை மற்றும் இனிப்பு பட்டாசுகள் என அனைத்தையும் வாங்க அதிக அளவு கூட்டம் கூடுவர்.அதனால் அனைத்து கடைகளிலும் கூட்ட நெரிசல் ஆகவே இதுக்கும்.அந்த வகையில் சென்னை மாநகராட்சி அனைத்து கடை உரிமையாளருக்கும் தற்பொழுது எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மக்கள் கடைகளிலும் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.அதுமட்டுமின்றி அனைத்து கடைகளிலும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி கடைகள் இயக்கப்பட்டால் கடை உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி அக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னையின் முக்கிய இடங்களான வணிக வளாகம்,அங்காடிகள், சந்தைகள், புரசைவாக்கம், கோயம்பேடு மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு பணி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.இதுவரை சென்னையில் மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 5040 பேர் மீது தற்போது வரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.அந்த வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ 10 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.அதேபோல சென்ற முறை அரசாங்கம் கூறிய நேரத்திற்கு மாறாக கடைகளை முன்புறம் மூடிவிட்டு பின்புறம் பலர் வியாபாரம் நடத்தி வந்தனர்.

அவ்வாறு விதிமுறைகளை மீறிய சில கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது என்பதும் குறிபிடத்தக்கது.அதேபோல இம்முறை விதிமுறைகளை மீறினால் சீல் வைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.அதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் தொற்றில்லா தீபாவளியை கொண்டாட முடியும்.