வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட சாதியினை சேர்ந்தோர் வழக்கு தொடர்ந்தனர். அதில் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்திற்கான 10.5% சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு அரசாணையை நீதிபதிகள் துரைசாமி, முதலியார் ஆகியோர் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீட்டு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.